வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் வடமகாண நடமாடும் சேவை நாளை மன்னாரில் நடைபெறவுள்ளது.
மன்னார் மாவட்ட செயலகத்தில் நாளை காலை முதல் இடம்பெறவுள்ள இந் நடமாடும் சேவையில் வட மாகாணத்திலுள்ள அரச திணைக்களங்களின் சேவைகளைப் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும், மோசமான காலநிலை ஏற்படுமாயின் நடமாடும் சேவை பிறிதொரு நாளுக்குப் பிற்போடப்படலாம் எனவும் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.