பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் சீனாவின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சன் ஹையனுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று நேற்று 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அலரிமாளிகையில் இடம்பென்றது.
இந்தச் சந்திப்பின் போது, சீனக் கம்யூனிஸ் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், சர்வதேச விவகாரத் தொடர்பாடல் திணைக்கள உயர்மட்ட அதிகாரிகள், இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர், சரோஜா பால்ராஜ், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமலி வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியாவின் பணிப்பாளர் நாயகம் ருவந்தி டெல்பிட்டிய ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
