யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சரும், தேசிய மக்கள் சக்தியின் வட மாகாண அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யாழ் . போதனா வைத்தியசாலைக்கு இன்று நேரில் விஜயம் செய்து பணிப்பாளருடன் நேரில் கலந்துரையாடிய போதே கடற்தொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று வைத்தியசாலைக்கு விஜயம் செய்த போது, வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை வைத்திய சாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சாத்தியமூர்த்தியிடம் நேரடியாக்க் கேட்டறிந்தார். சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி சாதகமான மாற்றங்களை கொண்டுவரத் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளவதாக அவர் உறுதி அளித்தார்.
மேலும், சுகாதார அமைச்சர் மருத்துவர் நளின்த ஜயதிஸ்ஸ விரைவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன் மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவ விடுதியில் தங்கியிருந்து சிகிச்சைபெறும் நோயாளர்கள் சிலருடன் அமைச்சர் இ. சந்திரசேகர் நேரடியாக அளவளாவியதுடன், விடுதி வசதிகளை நேரடியாகப் பார்வையிட்டார்.