கொழும்பில் பதற்றம்! போராட்டக்காரரின் ஆடையை களைந்த காவல்துறையினர்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற போராட்டத்தின் பொது காவல்துறையினரால் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக இன்று (20) இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது போராட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பத்திற்கும் மேற்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது மட்டுமன்றி போராட்டக்காரர்களை தாக்கி நடத்தி ஆடைகள் களையப்பட்ட காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும், இந்த போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் பொருட்களின் விலைகள் தொடர்பில் மக்கள் போராட்ட இயக்கத்தினர் அரசாங்கத்திற்கு இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!