தனிப்பட்ட தகராறு முற்றியதில் ஒருவர் மத்துகம பிரதேசத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று 16ஆம் திகதி இரவு 11.40 மணியளவில் மத்துகம, வோகன்வத்த, மேல் பிரிவு பகுதியில் வசித்து வந்த 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையைச் செய்த நபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, இக்கொலையைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் தொடாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரின் வீட்டிற்கு, இன்று 17ஆம் திகதி காலை வேளையில் சுமார் 50 பேர் கொண்ட கும்பல் சென்று தீ வைத்து எரித்து நாசமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
