ஜேர்மனி மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளிலிருந்து 5 இலட்சம் யூரோ (500,000 Euro) பெறுமதியான 69,000 கிலோகிராம் எடையுடைய அனர்த்த நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று இன்று 17ஆம் திகதி அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த விமானத்தில் கூடாரங்கள், சமையல் உபகரணங்கள், மெத்தைகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பெருமளவான நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குறித்த நிவாரணப் பொருட்களை ஏற்றிய போயிங் – 747 (Boeing-747) ரக பாரிய சரக்கு விமானம், இன்று அதிகாலை 04.30 மணியளவில் லீக் நகரிலிருந்து கட்டுநாயக்கவை வந்தடைந்ததுள்ளது.
இந்த நிவாரணப் பொருட்களை இலங்கைக்கான ஜேர்மனிய பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிபொன் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.
