முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கட்சியின் இளைஞர் அணி தலைவர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.

கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்க கட்சியின் முக்கியஸ்தரான மாரிமுத்து கணபதிப்பிள்ளை மற்றும் திலகநாதன் கிந்துஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற  உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் சட்ட ஆலோசர்களான சட்டத்தரணி சுகாஷ் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள்,  வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!