மேய்ச்சல்த் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் கைது! மாணவர்களை மீட்கத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர வேண்டுகோள்!

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல்த் தரை மீதான ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் மட்டக்களப்பு பொலிசாரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் நெவில்குமார் , விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவர் விதூசன் , கிழக்குப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் றொபின்சன் , யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் சிந்துஜன் மற்றும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் கஜன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்கள் என அறியக் கிடைத்தது.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களை மீட்பதற்கு உடனடியாகத் தலையிட வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவசரமாகக் கோரியுள்ளது.

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைகள் மீதான சிங்கள குடியேற்ற ஆக்கிரமிப்பையும், தொடர்ந்து இடம்பெறும் கால்நடைகளின் உயிர் கொலைகளையும் கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ் பல்கலைக்கழக மற்றும் கிழக்குப் பல்கலைக்க மாணவர்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டம் முடிந்து திரும்பிய பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்தை சந்திவெளிப் பகுதியில் மறித்த பொலிஸார் மாணவர்களை விசாரணைக்கு உட்படுத்தியதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேரையும், கிழக்குப் பல்கலைக்கழக மாணாவன் ஒருவரையும் கைது செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களை மீட்பதற்கு உடனடியாகத் தலையிட வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவசரமாகக் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!