யாழ் வரவுள்ள தொல். திருமாவளவன்

முனைவர் தொல். திருமாவளவன் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடத்தவுள்ள ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சியில் கலந்துக் கொள்வதற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிகழ்வானது நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) எதிர்வரும் வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அதன் தொடக்க விழாவில் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் இக் கண்காட்சி இம்மாதம் 23ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!