இலங்கைக்கான தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய தூதுவர்கள் குழு இன்று யாழ்ப்பாணத்துக்குக் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிலைமைகளை நேரில் கண்டறிந்தனர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள தூதுவர்களுக்கான இரண்டு வார வழிகாட்டல் திட்டத்தின் கீழ் இத்தாலிக்கான தூதுவர் சத்யஜித் ரோட்ரிகோ , எகிப்துக்கான தூதுவர் மதுரிகா வெனிங்கர், வங்காளதேசத்துக்கான உயர் ஸ்தானிகர் தர்மபால வீரக்கொடி , சிங்கப்பூருக்கான உயர் ஸ்தானிகர் செனரத் திசாநாயக்க , பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவர் சந்தன வீரசேன, இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகர் க்ஷேனுகா செனவிரத்ன, பாகிஸ்தானுக்கான உயர் ஸ்தானிகர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, நேபாளத்துக்கான தூதுவர் எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன, கியூபாவுக்கான தூதுவர் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம ஆகிய 11 பேர் அடங்கிய குழுவினரே இன்று யாழ்ப்பாணத்துக்குக் கள விஜயம் மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழக அலுவலகம் ஆகிய இடங்களுக்குச் சென்ற அவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், வர்த்தகர்கள் உட்படப் பலரையும் சந்தித்து கலந்துரையாடினர்.