கிளிநொச்சியில் பரபரப்பு…! கழிவு வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்…!

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே இளைஞனின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்று மாலை 7 மணியளவில் மக்கள் இறுதியாக அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த இளைஞன் இன்று(20)  காலை சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளின் பின்னர் குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணையின் பின்னர் இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!