திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் சுவாமி உலாவரும் வேளை சுவாமியை தமது தோல்களில் சுமந்து சென்ற காட்சி பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் அங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் படையெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், சில தினங்களுக்கு முன்னர் திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு கலாசார உடையுடன் வருகை தந்த சுற்றுலா பயணிகள் இருவர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் சுவாமி வலம் வரும் வேளை சுவாமியை தமது தோல்களில் சுமந்து சென்றுள்ளனர்.
இவ்வாறு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுவாமியை தோலில் சுமந்து செல்லும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.