யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டுவில் வடக்கைச் சேர்ந்த 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே நேற்றுப் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் மூதாட்டி உயிரிழந்துள்ளதாகச் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட வீட்டில் பொருட்கள் சிதறி கிடைப்பதனாலும், சந்தேகத்திற்கு இடமான முறையில் சடலமாக காணப்பட்டமையாலும் கொலையாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.