கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை நடைபெறவுள்ள மாபெரும் கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாகத் தனியார் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.
முழுக் கடையடைப்புக்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்டத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தமது சேவைகளை இடைநிறுத்தவுள்ளதாகவும், நாளை முல்லைத்தீவில் இருந்து தனியார் போக்குவரத்து சேவைகள் எவையும் இடம்பெறாது எனவும் முல்லைத்தீவு மாவட்டத் தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.