யாழ்.மாவட்ட செயலருக்கு பிரியாவிடை!

யாழ் மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலராகக் கடமையாற்றி ஓய்வு பெற்று செல்லும் அம்பலவானர் சிவபாலசுந்தரனுக்கு நேற்று  யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது யாழ் மாவட்ட செயலரின் நினைவுகளை தாங்கிய “அருமருந்தென்ன “என்ற தலைப்பிலான இறுவட்டு மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

இதேவேளை அவர் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கு வழங்கும் நிகழ்வும்  இடம்பெற்றது.

யாழ் மாவட்ட செயலராக கடந்த  2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  தனது  கடமைகளை பொறுப்பேற்ற மாவட்ட செயலர் 1995 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!