கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் மே 15 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவிருந்த சாதாரண தரப் பரீட்சைகள் மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக தகவல்களும் பெற்றுக் கொள்ள 011 2 785 922 / 011 2 784 208 / 011 2 784 537 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ அல்லது gceolexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
