குழாய் வழியில் பெற்றோலியப் பொருட்களைக் கொண்டு செல்ல அமைச்சரவை அனுமதி

கொலன்னாவ முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் பெற்றோலியப் பொருட்களைக் கடத்துதலை நடைமுறைப்படுத்துவதற்கான கருத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பெற்றோலியப் பொருட்கள் கொழும்பு துறைமுகம் தொடக்கம் கொலன்னாவ முனையம் வரைக்குமான 05 குழாய் வழிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது.

குறித்த குழாய் வழிகள் மிகவும் பழையவையாவதுடன், கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாகக் கசிவுகள் ஏற்பட்டுள்ளன.

அதனால், நம்பகமான குழாய் தொகுதி இருக்க வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு, அதற்கான கருத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு இதற்கு முன்னரும் கருத்திட்ட முன்மொழிவுகள் கோரப்பட்டிருப்பினும், குறித்த முன்மொழிவுகள் மூலம் பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்யப்படவில்லை.

அதனால், இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய பெறுகைச் செயன்முறையை முடிவுறுத்தி, கொழும்பு துறைமுகத்தின் பொல்ஃமின் எண்ணெய்க் கப்பல் தடாகத்திலிருந்து கொலன்னாவ முனையம் வரைக்கும் 18 அங்குலம் மற்றும் 14 அங்குலம் விட்டத்துடன் கூடிய குழாய் உள்வழியை சோதனை செய்யக்கூடிய வகையிலான இயந்திரோபகரணங்களைப் பயன்படுத்தக்கூடிய 02 குழாய் வழிகளை நிர்மாணித்தல், கொழும்பு துறைமுகத்தின் பொல்ஃமின் எண்ணெய்க் கப்பல் தடாகத்திலிருந்து சேரம் வாயில் வரைக்கும் 12 அங்குலம் விட்டத்துடன் கூடிய கடலுக்கு அடியில் செல்லும் குழாய் வழியை நிர்மாணித்தல் மற்றும் கொழும்பு துறைமுகம் மற்றும் கொலன்னாவ முனையங்களைத் தேவைக்கேற்ப மாற்றியமைத்தல் போன்ற கருத்திட்டக் கூறுகளைக் கூடிய ‘கொலன்னாவ முனையம் தொடக்கம் கொழும்பு துறைமுகம் வரைக்குமான குழாய் வழியில் குழாயிடல் கருத்திட்டம்’ பொறியியல், பெறுகை, நிர்மாணித்தல் மற்றும் இயக்குதல் (EPCC) கருத்திட்டமாக அமுல்படுத்துவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!