ரணில் கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்ட அவர் தற்போது கைது செய்யப்ப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்

தனிப்பட்ட பயணத்துக்கு அரச நிதி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைக்கமைய, வாக்குமூலம் பெறுவதற்காக ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு பயணம் செய்த வேளையில், அரச நிதி பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!