மாத்தறையில் உள்ள தனியார் பெண்கள் பாடசாலையில் தீ விபத்து!

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை விரைவாக அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதிலும், அங்கிருந்த பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்தீ விபத்தின் போது பாடசாலையில் சுமார் 150 மாணவிகள் இருந்த போதிலும், எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!