களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக, சில இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே அறிவிப்பு விடுத்துள்ளார்.
இதன்படி, பின்வரும் பகுதிகளில் உள்ள தாழ்வான நிலங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடுவெல – மாலபே வீதி, அத்துருகிரிய – மாலபே வீதி, மாலபே முதல் பத்தரமுல்லை வரையிலான வீதிகளில் உள்ளோர் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் மாலபே ஆண்கள் கல்லூரிக்கு அல்லது பிட்டுகல யசோதரா மகா வித்தியாலயத்திற்குச் செல்லுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
