பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையைத் தொடர்ந்தும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, விமான நிலையத்திற்கான சில பிரவேச வீதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதனால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் விமான நிலைய வளாகத்தினுள் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, பயணிகளுடன் விருந்தினர்களை முனையத்திற்கு அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் பயணிகளிடம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.
சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் விமான நிலைய செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குப் பயணிகள் வழங்கும் ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வைப் பாராட்டுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
