இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்குவதற்காக புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த புதிய தொலைபேசி இலக்கமான 1995 ஊடாக வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க முடியும் என்று சுற்றாடல் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
