தமிழரசுக்காக ஈ.பி.டி.பி யிடம் ஆதரவு கோரினார் சிறீதரன் – பகிரங்கமாகப் போட்டுடைத்தார் ஈ.பி.டி.பியின் பேச்சாளர் !

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவைக் கோரினார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட ஊடகப் பேச்சாளர் ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களிலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் யாழ் மாநகர சபையில் ஈ.பி.டி.பியிடம் ஆதரவு கேட்டு – நாம் அதற்கு ஆதரவு வழங்கிய போதும் அதன் பின்னர் அதனை மறுத்திருந்தனர். கடந்த காலங்களில் யாழ் மாநகர சபை தொடர்பான விடயங்களில் சீ.வீ.கே.சிவஞானம், மாவை சே. சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே எம்முடன் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டிருந்தனர்.

ஆனால், இம்முறை நடந்த மாநகர முதல்வர் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆதரவு கோரினார். கடந்த கால விடயங்களை கருத்திற் கொண்டு உத்தியோக பூர்வமாகக் கடிதம் மூலம் ஆதரவு கோரினால் அது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என்றோம். அதற்கு அவர் உடன்படவில்லை. இனியும் கூட, இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி உத்தியோக பூர்வமாக – எம்மிடம் கடிதம் மூலம் ஆதரவு கோரினால் அது தொடர்பாகச் சாதகமாகப் பரிசீலிக்க முடியும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!