பொண்ணொருவரிடமிருந்து பாலியல் இலஞ்சமும், 12 இலட்சம் கப்பமும் கோரிய பலாலி பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தப் பெண் தனது காதலுடன் தனிமையில் இருந்த காணொலியை வைத்திருந்த பொலீஸ் அதிகாரிகள் இருவரும், அந்தப் பெண்ணின் வீட்டைக் கண்டு பிடித்து, வீட்டுக்குச் சென்று மிரட்டியுள்ளதுடன், பெண்ணிடமிருந்து பாலியல் இலஞ்சமும், 12 இலட்சம் கப்பமும் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலீஸார் தன்னை மிரட்டியமை, பாலியல் இலஞ்சம் மற்றும் கப்பம் கோரியமை தொடர்பில் போதுமான ஆதாரங்களைத் திரட்டிய அந்தப் பெண், ஆதாரங்களுடன் சுன்னாகம் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று மல்லாகம் நிதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.