குற்றச்செயலில் ஈடுபட்ட பலர் ஆயுதங்களுடன் கைது!

நாடு முழுவதையுமாக உள்ளடக்கி ஜனவரி 12ஆம் திகதி முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 5,414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகத்தின் பேரில் 129,448 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 56,365 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மொத்தமாக 6,127,138 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், 47,938 மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அஜாக்கிரதையாக வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட வீதிப் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 769,933 பேருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் மூலம் ஜனவரி 01ஆம் திகதி முதல் இன்று வரை, 67 T56 துப்பாக்கிகள், 73 ரக கைத்துப்பாக்கிகள், 50 ரிவோல்வர்கள் மற்றும் 1,907 ஏனைய ஆயுதங்கள் உட்பட மொத்தம் 2,097 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், ஜனவரி 01ஆம் திகதி முதல் ஒக்டோபர் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், 1,482 கிலோ 820 கிராம் ஹெரோயின், 14,434 கிலோ 468 கிராம் கஞ்சா, 32 கிலோ 642 கிராம் கொக்கெய்ன், 582 கிலோ 136 கிராம் ஹஷீஸ், 2,542 கிலோ 454 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 3,961,790 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!