ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான, தம்மை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றி அவர் இதனைத் தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர், களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஜகத் விதான எம்.பி நடவடிக்கை எடுத்ததுடன், இது குறித்து சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவரப்படும் என பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இது ஒரு பாரதூரமான நிலைமை என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
