சஜின் வாஸ் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, சட்டவிரோத சொத்துக்களைச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் ஈட்டியது தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, இன்று முற்பகல் அவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சென்றிருந்த வேளையிலேயே, விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!