யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்தவர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் நேற்று 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி, அச்செழு பகுதியை சேர்ந்த 56 வயதுடைய சுப்பையா உதயராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கடந்த 22ஆம் திகதி மேல் மாடியில் மேசன் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், இவர் வெற்றிலை துப்புவதற்காக கட்டிடத்தின் முகப்பு பகுதிக்கு சென்றவேளை கால் தவறி கீழே விழுந்துள்ளார்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று 31 ஆம் திகதி காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் தலைமையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
