சமூக ஊடக விளம்பரங்களின் மூலம் பண மோசடி

சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் தளங்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியகத்தின் எந்தவித அனுமதியுமின்றி சமூக ஊடகங்கள் ஊடாகக் கலந்துரையாடல்களை நடத்தி இந்தப் பண மோசடிகள் நடைபெறுவதாகக் தெரிவிக்கப்படுள்ளது.

இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவை போலி விளம்பரங்கள் என்றும், அவற்றுக்கு பணியகத்தில் எவ்வித அனுமதி பெறப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து, சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி உதவியாளர் வேலைகள் வழங்குவதாகக் கூறி, 76 இலட்சம் ரூபாய் வரையான பணத்தை மோசடி செய்த ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளதோடு, இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வேலைவாய்ப்பு பணியகம்  தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 3 வருடங்கள் சிங்கப்பூரில் கல்வி கற்றவர் என தெரியவந்துள்ளதுடன் அங்கு அவர் அறிமுகமான ஒரு நிறுவனத்திற்குத் தொழிலாளர்களை அனுப்புவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 5 பேரிடம் பணம் பெற்றுள்ளதாகவும் இருந்தும் வேலைவாய்ப்புக்கள் வழங்கவில்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!