ஜனாதிபதி தலைமையில் “தூய இலங்கை” செயற்றிட்ட அங்குரார்ப்பணமும், அரச ஊழியர்கள் சத்திய உறுதியுரையும் நாளை!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள “க்ளீன் ஶ்ரீலங்கா” செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வும், 2025 ஆம் ஆண்டு அரச பணிகளை ஆரம்பித்தல் நிகழ்வும் ஒருங்கிணைந்ததாக நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை ஜனவரி முதலாம் திகதி அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்துப் பொது நிர்வாகச் சுற்றறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, “தொடங்கவிருக்கும் 2025 ஆம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் ஜனவரி மாதம் 01ஆம் திகதி புதன்கிழமை “க்ளீன் ஶ்ரீலங்கா” நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைத்தல், அரச துறை மற்றும் தனியார் துறை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கு “க்ளீன் ஶ்ரீலங்கா” சனாதிபதி செயலணி ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரித்துள்ளது. அதன்போது, அனைத்து அரசதுறை நிறுவனங்களின் தலைவர்கள், ஒட்டுமொத்த அரச சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரினதும் ஒத்துழைப்புடன், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் செயற்பாடுகளிற்கு இணையாக தமது சேவை நிலையங்களில் கடைமைகளை ஆரம்பிக்கும் உத்தியோக பூர்வ வைபவத்தை நடாத்துதல் வேண்டும். பொது மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில், பொதுமக்களுக்கு வினைத்திறனுடனும் பயனுள்ளதுமான அரச சேவையினை வழங்குவதற்காக ஒட்டுமொத்த அரச சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் திடசங்கற்பத்துடன் அர்ப்பணிக்க வேண்டியுள்ளதால், அதற்கு இணையாக அன்றைய தினம், அதேநேரத்தில் நிகழ்ச்சிகளைத் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்” என அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “நாளை காலை 08.30 மணிக்கு அனைத்து அரச அலுவலகங்களிலும் அவ்வவ் அலுவலகங்களின் தலைவர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்படல் வேண்டும். அதனைத் தொடர்ந்து உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமட மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், 09.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நேரலை வாயிலாக “க்ளீன் ஶ்ரீலங்கா” செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறும். இதனை நேரடியாகத் தமது பணியாளர்கள் பார்வையிடுவதற்கான வசதிகளை ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் செய்தல் வேண்டும் என்பதுடன் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் “க்ளீன் ஶ்ரீலங்கா” சத்தியப்பிரமாண உறுதியுரையைச் செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!