கடவுச்சீட்டுக்களை வழங்க முருகன் உள்ளிட்டோருக்கு இலங்கை துணைத் தூதரகம் அழைப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய மூன்று பேருக்கான கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக இன்று இலங்கை துணை தூதரகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசாங்கம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணல் இன்று இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதியை பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று நேர்காணலுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று முருகனை நோகாணல் செய்வதற்கு அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

அத்துடன் ரொபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்வதற்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!