அயகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சமருகம பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் எனவும், அயலவர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 40 வயதுடைய சந்தேக நபரை சமருகம பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.
