இன்றும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

இதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்டபடி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும், பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்று 2ஆம் திகதியும் ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாகாண மட்டத்திலான பாடசாலைகளையாவது ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்விச் செயலாளர்   தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!