நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததினால் இது வரையில் 410 உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன.
இன்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி 336 பேர் காணாமல் போயுள்ளதோடு,407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1,466,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான 88 இறப்புகள் பதிவாகியுள்ளன.
