மினுவாங்கொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபர் நேற்று 27ஆம் திகதி கைது செய்யப்படுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, மெகஸின் மற்றும் டி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 25 தோட்டாக்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் 43 வயதுடைய மினுவாங்கொடை, ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுக்கப்பdடுள்ளது
