போதைப்பொருளுடன் பெண்கள் உட்பட நால்வர் கைது

‘குஷ்’ போதைப்பொருளை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே கொண்டு செல்ல முயன்ற நான்கு இலங்கை பயணிகள் இன்று 29ஆம் திகதி விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்த 20 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொகை இதன்போது அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டது.

சந்தேக நபர்கள் இந்தப் போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, இந்தியாவின் மும்பை நகருக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பெண்கள் என்பதுடன், இவர்கள் பொரளை மற்றும் ஒருகொடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, பிரதி பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!