தேர்தல் விதி மீறல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் இன்று காலை பதுளை பொலீஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதுளை பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
