பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார்.
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார்.
