போதைப்பொருட்களுடன் கடற்படையினரால் தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று 24ஆம் திகதி காலை 6.00 மணியளவில் இந்தப் படகு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன் படகிலிருந்த 5 சந்தேகநபர்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
படகிலிருந்து மீட்கப்பட்ட 11 பைகளில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இப்படகு கந்தர பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட படகில் இருந்து 21 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்தப் போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் 200 கோடி ரூபா எனப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
