கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் பயிரிடப்படுள்ளதோடு இது தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவர் நேற்று 23ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன் கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று 24ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
