சீரற்ற வானிலையால் இதுவரையில் 56 உயிரிழப்புகள்

சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

21 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 4 வீடுகள் முழுமையாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!