பஹல கடுகன்னாவ மண்சரிவு முழுப்பிரதேசத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தாது ஆய்வு பிரிவு தெரிவிப்பு

பஹல கடுகன்னாவ பகுதியில் நேற்று 22ஆம் திகதி இடம்பெற்ற மண்சரிவானது அந்த இடத்திற்கு மட்டுமே உரித்தான ஒரு அபாய நிலைமையே தவிர, முழுப் பிரதேசத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாய நிலைமை அல்ல என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கடுகன்னாவ பிரதேசம் முழுவதும் மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரயில் மார்க்கம் அமைந்துள்ள பகுதி முழுமையாக தாய்ப்பாறையின் மீதே அமைந்துள்ளதுடன், சரிந்து விழுந்த பாறையானது, கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு மேலே இருந்த அந்தத் தாய்ப்பாறையிலிருந்து சிதைவடைந்த ஒரு பகுதி மட்டுமேயாகும்.

இதன் காரணமாக ரயில் மார்க்கத்திற்கோ அல்லது பிரதான வீதிக்கோ பாரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. அந்த பாதிப்பு அந்தந்த இடங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரிந்து விழுந்த பாறைத் துண்டுகளை அகற்றி, வீதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே தற்போது வீதி மூடப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!