நானுஓயாவில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா பங்களாவத்த பகுதியில் இன்று 19 ஆம் திகதி பிற்பகல் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகிடுள்ளன.

விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபர் படுகாயமடைந்துள்ளார்.

அவருக்கு 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், நுவரெலியாவிலிருந்து நானுஓயா நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும், நானுஓயா பங்களாவத்த பகுதியில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு,விபத்துச் சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!