உயிர்மாய்ப்பு செய்துகொண்ட சிறைச்சாலை கைதி

குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் இன்று 29ஆம் திகதி பிற்பகல் தான் அணிந்திருந்த சறத்தால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சந்தேகநபர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை அறிந்த சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அதற்கு முன்பே உயிரிழந்து விட்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிதுள்ளனர்.

உயிரிழந்தவர் எரேபொல சிறிபெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மீது கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, குறித்த சந்தேகநபர் கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பான அடையாள அணிவகுப்புக்காக முன்னிலைப்படுத்தப்பட விருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்படுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!