நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல்கள் திணைக்களத்துக்குத் தேவையாள எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் திணைக்கள அதிகாரிகள் திண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் பணிகளுக்காக அதிகளவான போக்குவரத்துத் தேவை ஏற்பட்டுள்ள போதிலும் வளமையான வாராந்த கோட்டாவின் கீழ் – கியூ. ஆர் முறை ஒதுக்கீட்டின் அடிப்படையில் மட்டுமே தேர்தல்கள் திணைக்களத்துக்கும் எரிபொருள் பெற வேண்டியிருப்பதனாலேயே தேர்தல் பணிகளை முன்னெடுப்பதில் திணைக்கள அதிகாரிகள் திண்டாடுவதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் பணியிலீடுபடும் வாகனங்களுக்குச் சிரமின்றி எரிபொருளை வழங்குமாறு அந்தந்த மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர்களான அரசாங்க அதிபர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் கியூ. ஆர். இல்லாமல் எரிபொருளைப் பெற முடியாத நிலை காணப்படுவதாகத் தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.