முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபடி சூம் தொழில்நுட்பம் மூலமாக நிகழ்நிலை விசாரணையில் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
