விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொது மக்கள் குவிந்துள்ளமையால் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலீஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையிலான கைகலப்பின் போது பொதுமக்களின் தாக்குதலில் பொலீஸார் சிலர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் மற்றும் கொம்பனித்தெரு வரையிலான பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
