யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்றத் தெரிவைச் சவாலுக்கு உட்படுத்தி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாக்கப்பட வேண்டும் எனக்கோரி “கியோ வொரண்டோ” நீதிப் பேராணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய சுதந்திர முன்னணியன் தலைவர் ஓஷல ஹேரத்தினால் இன்று மேன்மைறையீட்டு நீதிமன்றத்தில் இந்த நீதிப் பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் இ. அர்ச்சுனா தனது மருத்துவ அதிகாரி பதவியில் இருந்து விலகாமல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வதற்குத் தகுதி அற்றவர் எனத் தெரிவித்துள்ள மனுதாரர், நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் இ. அர்ச்சுனா தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனக் கோரயுள்ளார்.
இன்று காலை இந்த மனு விசாரணைக்கு வந்த போது, எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி சமர்ப்பணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஷெனால் பெர்ணாண்டோ மற்றும் என். கே. அஷோக்பரன் ஆகியார் முன்னிலையாகினர்.
