மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

மக்கள் போராட்ட இயக்கத்தினால் நேற்று கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நால்வரை மார்ச் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர, ரத்கராவே ஜினரதன தேரர் மற்றும் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மேலும் 5 பேரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர்களை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!