யாழில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்த அதேவேளை மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.

இன்று காலை பளையிலிருந்து சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் புத்தூர் பகுதியில் வைத்து பொலிசாரால் இடைமறிக்கப்பட்டது.

வாகனம் பொலிசாரால் இடை மறிக்கப்பட்ட போது சாரதி வேகமான வானத்தை செலுத்தியிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத்தை பின்தொடர்ந்த பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு குறித்த டிப்பர் வாகனத்தை தடம்புரளச் செய்துள்ளனர்.

டிப்பர் வாகனத்தின் டீசல் தாங்கி மற்றும் டயர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடமையிலிருந்த காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்பு பொலிசாரால் கைது செய்ப்பட்ட மூவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!